×

எல் நினோவின் தாக்கத்தால் இந்தியாவில் இம்மாதம் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும் : அதிர்ச்சி தகவல்

டெல்லி : எல் நினோவின் தாக்கத்தால் இந்தியாவில் இம்மாதம் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நடப்பாண்டில் நவம்பர் மாத மழை இயல்பை ஒட்டி இருக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவின் சில பகுதிகள், வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள், வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இயல்பை விட அதிக மழை பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே எல் நினோவின் தாக்கம் அதிகரிப்பதால் நாட்டின் பல பகுதிகளில் இந்த மாதம் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை உயர்வான எல் நினோவின் தாக்கம், அடுத்த ஆண்டு கோடை காலத்தின் தொடக்கம் வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் இந்தியாவில் அக்டோபர் மாதம் பருவமழையின் அளவானது 123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்து இருந்த நிலையில், எல் நினோவின் தாக்கத்தால் இந்த மாதம் பருவமழையின் அளவு மேலும் குறைந்து வெயில் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

The post எல் நினோவின் தாக்கத்தால் இந்தியாவில் இம்மாதம் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும் : அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,El Niño ,Delhi ,Indian Meteorological Survey ,El ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...